மின் கம்பியில் சிக்கி வாலிபர் பலி
ராஜபாளையம் ; விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே லாரி மோதிய விபத்தில் தொய்வாக இருந்த மின்கம்பியில் சிக்கி செல்வராஜ் 25, உயிரிழந்தார்.தளவாய்புரம் அடுத்த அருள்புத்துாரை சேர்ந்தவர் சேவியர் மகன் செல்வராஜ். ராஜபாளையம் தனியார் பஸ் நிறுவனத்தில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் தளவாய்புரம் ரோட்டில் லோடு ஏற்றி சென்ற லாரி மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பி தொய்வாக தொங்கியது. மாலையில் பணி முடிந்து டூவீலரில் அவ் வழியாக வந்த செல்வராஜ் கழுத்து, அந்த மின்கம்பியில் சிக்கியதில் பலத்த காயமடைந்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.