உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சாத்துாரில் வாலிபர் வெட்டிக் கொலை

சாத்துாரில் வாலிபர் வெட்டிக் கொலை

சாத்துார் : சாத்துார் ஒத்தையாலை சேர்ந்தவர் பொன்ராஜ் மகன் சங்கர், 26. பட்டாசு ஆலை தொழிலாளி. நேற்று மாலை 5:00 மணிக்கு அதே பகுதி பட்டாசு ஆலையில் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது கருப்பசாமி கோயில் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டி தப்பியோடினர். அவர் சம்பவ இடத்தில் பலியானார். தப்பியோடிய மர்ம நபர்களை சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை