| ADDED : ஆக 01, 2011 11:26 PM
விருதுநகர்: இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு, ரேஷனில் பொருட்கள் வழங்க, இந்த மாதம் முதல் தனி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, இந்த மாதம் முதல் ரேஷனில் அனைத்து பொருள்களையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்கு ரேஷன் கடைகளில் விற்பனையாகாத பொருட்களிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாதம் ஒன்றுக்கு ஒரு ரேஷன் கார்டுக்கு 20 கிலோ அரிசி இலவசமாகவும், அதற்கு மேல் தேவைப்படுவோர் கிலோ 47 காசுக்கும் பெற்றுக்கொள்ளலாம். பருப்பு வகைகள், கோதுமை மாவு, பாமாயில், மண்ணெண்ணெய் உட்பட அனைத்து பொருட்களும் இந்த மாதம் முதல் வழங்கப்படுகிறது. அகதிகள் முகாமுக்கு தேவையான அளவு தனி ஒதுக்கீடு செய்துள்ளதால், அவர்களுக்கு பிரச்னை இல்லாமல் பொருட்கள் கிடைக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.