உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சக்சேனா கூட்டாளி அய்யப்பனை ஒரு நாள்போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சக்சேனா கூட்டாளி அய்யப்பனை ஒரு நாள்போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

சென்னை:'தீராத விளையாட்டு பிள்ளை' பட விவகாரம் தொடர்பாக, 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனாவின் கூட்டாளி அய்யப்பனை, ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.சேலத்தைச் சேர்ந்த திரைப்பட வினியோகஸ்தர் சண்முகவேல், 'தீராத விளையாட்டு பிள்ளை' திரைப்படத்தின் வினியோகம் தொடர்பான விவகாரத்தில், 'சன் பிக்சர்ஸ்' தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அவரது கூட்டாளி அய்யப்பன் உள்ளிட்ட சிலர், தன்னை மிரட்டி, தாக்கியதாக கோடம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அப்புகாரின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் மேலும் சிலர் உடந்தையாக இருப்பதால், அய்யப்பனை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற மனுவை, அரசு வழக்கறிஞர் கோபிநாத் தாக்கல் செய்தார். கோர்ட்டில் அய்யப்பனை போலீசார் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கு தொடர்பாக அய்யப்பனை, ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் அகிலா ஷாலினி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி