உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வளர் இளம் பருவ கல்வித் திட்டம்: மாணவியருக்கு சிறப்பு பயிற்சி

வளர் இளம் பருவ கல்வித் திட்டம்: மாணவியருக்கு சிறப்பு பயிற்சி

ராமநாதபுரம்:தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவியருக்கு,'வளரிளம் பருவ கல்வி' பயிற்சி அளிக்கும் திட்டம் துவக்கப்பட உள்ளது. இதற்காக, கல்வித் துறை மூலம் மாணவியருக்கு இலவச கையேடு வழங்கி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மூலம் வளர் இளம் பெண்களுக்கு, உடல் ரீதியான சந்தேகங்களை தீர்க்க உள்ளனர்.தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவியருக்கு,'வளர் இளம் பெண்களின் வாழ்க்கை காப்போம்' என்ற தலைப்பில், வளரும் பெண்களிடம் ஏற்படும் மாற்றங்கள், உடல் ரீதியான சந்தேகங்கள் விளக்கப்பட உள்ளன. உடல் மற்றும் மனத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.இதற்காக, மாவட்டம்தோறும் ஒருங்கிணைப்பாளர்களை நியமித்து, அவர்களுக்கு சென்னையில், சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளனர். இவர்கள், மாவட்டத்தின் மற்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவியருக்கு விளக்கம் அளிக்க உள்ளனர். இதற்காக, மாணவியருக்கு இலவச கையேடு வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறிகையில், 'வகுப்பில் ஒரு பெட்டி வைக்கப்படும். அதில், மாணவியருக்கு ஏற்படும் சந்தேகங்களை எழுதிப் போடலாம். இதற்கு ஆசிரியர் பதில் அளிப்பார். மேலும் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்