உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நின்ற லாரி மீது ‌வேன் மோதல்: பெண் பலி

நின்ற லாரி மீது ‌வேன் மோதல்: பெண் பலி

ஸ்ரீபெரும்புதூர்: நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் ‌மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். 21 பேர் படுகாயமடைந்தனர். காஞ்சிபுரம் அருகே படப்பை நகரில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு பணியாற்ற , காஞ்சிபுரம், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் , ஒரு தனியார் வேனில் சென்று கொண்டிருந்தனர். ஸ்ரீபெரும்புதூர்- ஓரகடம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது இடது ஓரம் டிப்பர் லாரி நின்று கொண்டிருந்தது. இதை கவனிக்காத வேன் டிரைவர் டிப்பர் லாரி மீது மோதினார். இதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணியப்பன் மகள் அம்மு, 20 சம்ப இடத்திலேயே பலியானார். 21 பேர் காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ