உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மதுரையில் போலீஸ் மீது பாட்டில் குண்டு வீச்சு

மதுரையில் போலீஸ் மீது பாட்டில் குண்டு வீச்சு

மதுரை :மதுரை அனுப்பானடி பஸ் ஸ்டாண்ட் வழியாக நேற்று மதியம் 1.30 மணிக்கு சிந்தாமணிக்கு ஜல்லி ஏற்றிய டிப்பர் லாரி ஒன்று சென்றது. அப்போது தெய்வகன்னித்தெருவில் இருந்து சிலர், செங்கல் ஒன்றை லாரி மீது வீசியதில், முன்பக்க கண்ணாடி சேதம் அ­டைந்தது. அதிர்ச்சியடைந்த டிரைவர், லாரியை பின்னோக்கி எடுத்து வந்தார். அப்போது பாதுகாப்பிற்கு நின்றிருந்த இன்ஸ்பெக்டர் சுகுமாறன் தலைமையிலான போலீசார் விசாரிக்க சென்றனர். அப்போது அவர்களை குறிவைத்து மண்ணெண்ணெய் பாட்டில் குண்டில் தீ வைத்து வீசிவிட்டு மர்மகும்பல் தலைமறைவானது. இது போலீஸ் முன் வெடித்து சிதறியது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக இருவரிடம் தெப்பக்குளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை