மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 2
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
12 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
13 hour(s) ago
பனைமரத்துப்பட்டி: சேலம் அருகே கொங்கு இளைஞர் பேரவையின் ஒன்றிய செயலாளரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். மல்லூர் போலீஸ் சரகம் கிழக்குகாடு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். இவர் பனைமரத்துப்பட்டி ஒன்றிய கொ.இ.பேரவை செயலர். இவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாடா சபாரி காரை மர்ம நபர்கள் சிலர் தீ வைத்து விட்டு சென்று விட்டனர். இதில் கார் பின்பகுதி முழுவதும் எரிந்து சாம்பலானது. அரசியல் ரீதியான முன்விரோதம் காரணமாக யாரும் தீ வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
1 hour(s) ago | 2
12 hour(s) ago | 1
13 hour(s) ago