மேலும் செய்திகள்
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்
3 hour(s) ago | 5
சென்னை:'அ.தி.மு.க., அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலை நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தை முடிவிற்குப் பின் வேட்பாளர்களை இறுதிப்படுத்த வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதாவுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவுக்கு, ராமகிருஷ்ணன் எழுதிய கடிதம்:உள்ளாட்சித் தேர்தலில், எங்கள் கட்சிக் குழு, அ.தி.மு.க., குழுவோடு சந்தித்து பேச்சு நடத்தியது. 20ம்தேதி (இன்று) பேச்சுவார்த்தை நடைபெறும் என, தீர்மானிக்கப்பட்டது. ஆனால், 124 நகராட்சித் தலைவர்களின் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.பேரூராட்சித் தலைவர் வேட்பாளர் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போது, வேட்பாளர் பட்டியலை அறிவித்திருப்பது, சரியான அணுகுமுறை அல்ல.
இது, கூட்டணிக் கட்சிகளின் கீழ்மட்ட ஊழியர்கள் மத்தியில், குழப்பத்தை ஏற்படுத்த வழி வகுக்கும்.எங்கள் கட்சியைப் பொறுத்தவரையில், தொடர்ந்து பேச்சு நடத்தி, சுமுகமான உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என விரும்புகிறது. அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலை நிறுத்தி வைத்து, பேச்சுவார்த்தை முடிவிற்குப் பின், வேட்பாளர்களை இறுதிப்படுத்துவதே கூட்டணிக் கட்சிகளுக்குள், நல்ல இணக்கத்தை உருவாக்கப் பயன்படும்.இவ்வாறு, ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
3 hour(s) ago | 5