உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சேலத்தில் குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் கைது

சேலத்தில் குடிநீர் வாரிய நிர்வாக பொறியாளர் கைது

சேலம்: சேலத்தில் ஒப்பந்ததாரரிடம் ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்ட குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் மேட்டூரையடுத்த குண்டுக்கல் பகுதியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் சார்பில் அளிக்கப்பட்ட ஒப்பந்த பணியை மேற்கொள்ளவிருந்த நந்தகோபால் என்ற ஒப்பந்ததாரிடம், சேலம் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் ரமேஷ், ரூ. 50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் அளிக்க மறுத்த நந்தகோபால், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். இந்நிலையில், இன்று தனது அலுவலகத்தில் ரமேஷ் கையும் களவுமாக பிடிபட்டு, கைது செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை