மேலும் செய்திகள்
சசிகலா வீட்டை உளவு பார்க்கும் நபர் யார்?
2 hour(s) ago
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
2 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
2 hour(s) ago
சென்னை: சென்னை மீன்பிடி துறைமுகம்,ஜெகதாபட்டினம் மற்றும் முடசலோடை மீன் பிடி இறங்கு தளங்கள், 12.86 கோடி ரூபாய் செலவில் தரம் உயர்த்தப்படுகின்றன. சமீபகாலமாக, கடல் மீன் உணவுப் பொருட்களின் தரம் குறித்து, உலகளாவிய அளவில் எழுந்துள்ள விழிப்புணர்வு தொடர்பான சவால்களைச் சமாளிக்கவும், ஏற்றுமதியை மேம்படுத்தவும், மீன்பிடி துறைமுகங்களிலும், மீன் பிடி இறங்கு தளங்களிலும், வசதிகளைத் தரம் உயர்த்துவது அவசியமாகிறது. இதனையொட்டி, சென்னை மீன்பிடி துறைமுகம், 12.07 கோடி ரூபாய் செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி இறங்கு தளம், 53.26 லட்ச ரூபாய் செலவிலும், கடலூர் மாவட்டம் முடசலோடை மீன் பிடி இறங்கு தளம், 25.32 லட்ச ரூபாய் செலவிலும் தரம் உயர்த்தப்பட, தமிழக அரசு மூலம், நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago