உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு சாஸ்தா -25

தினமும் ஒரு சாஸ்தா -25

தடை தகர்க்கும் அய்யனார்

திருவள்ளூர் மாவட்டம் சிறுங்காவூரில் உள்ள அய்யனாரை வணங்கினால் தடைகள் விலகும். அய்யனார் இங்கு 'பேரிடி தாங்கி தர்மசாஸ்தா பச்சை பெருமாள்' என அழைக்கப்படுகிறார். இதற்கு காரணம் 2006ல் கும்பாபிஷேகம் முடிந்து மண்டல பூஜை கழித்து பெரிய இடி கோயிலை தாக்கியது. அதை தாங்கியதால் 'பேரிடி தாங்கி தர்மசாஸ்தா' ஆனார். அதைப்போல் துாத்துக்குடி வாழவல்லானில் உள்ள பச்சை பெருமாள் அய்யனார் கோயிலில் இருந்து பிடிமண் எடுத்து இங்கு கொண்டு வந்தார்கள். இதனால் 'பச்சை பெருமாள் சாஸ்தா' எனவும் பெயர் பெற்றார். பூர்ணா புஷ்கலாவுடன் காட்சி தரும் இவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்தால் தடை நீங்கும். பங்குனி உத்திரம், டிச.13ல் சிறப்பு பூஜை நடக்கும். அய்யனாருக்கு எதிரே கருப்பசாமி கோயில் உள்ளது. வேப்பமரம் தலவிருட்சமாக உள்ளது. திருவள்ளூரில் இருந்து 27 கி.மீ., நேரம்: காலை 8:00 - இரவு 10:00 மணிதொடர்புக்கு: 98401 38989, 88382 09600அருகிலுள்ள தலம்: திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் 32 கி.மீ., நேரம்: காலை 7:30 - 11:30 மணிமாலை 4:30 - 8:30 மணிதொடர்புக்கு: 044 - 5517 3417


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி