மேலும் செய்திகள்
முதல்வருக்கு எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டோம்: திருமாவளவன்
1 hour(s) ago | 2
வள்ளலாரை ஈ.வெ.ரா.,வுடன் ஒப்பிடுவதா?
6 hour(s) ago | 1
சசிகலா தனிக்கட்சியா? நோ கமென்ட்ஸ்
6 hour(s) ago
திருநெல்வேலி: நெல்லை பேட்டை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ரூ. 100 கோடி மதிப்பிலான வக்புவாரிய நிலத்தை மீட்கக்கோரி, மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. நெல்லை பேட்டை பகுதியில் வக்பு வாரியத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான நிலம், தி.மு.க., மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் உறவினர் ஸ்டாலின் பாண்டியன் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த நிலத்தை மீட்கக்கோரி, மனிதநேய மக்கள் முன்னேற்றக்கழகத்தின் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எனினும் தடையை மீறி கலெக்டர் நடராஜனிடம் மனு அளித்த பின் நிருபர்களிடம் பேசிய மாநிலத்தலைவர் ரபீக், வரும் 24ம் தேதிக்குள் நிலத்தை மீட்காவிட்டால், பேட்டையில் கரசேவை என்ற போராட்டத்தின் மூலம் நிலம் மீட்கப்படும் என்று தெரிவித்தார்.
1 hour(s) ago | 2
6 hour(s) ago | 1
6 hour(s) ago