உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இந்தாண்டு இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி

இந்தாண்டு இறுதியில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி

திருநெல்வேலி: இந்தாண்டு இறுதியில் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் உலையில், மின் உற்பத்தி துவங்கும் என கூடங்குளம் அணுமின் நிலைய இயக்குநர் காசிநாத் பாலாஜி தெரிவித்தார். கூடங்குளத்தில் நிருபர்களிடம் பேசிய அவர், ஒவ்வொன்றும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு அணு உலைகள் ரூ. 14 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். முதல் உலையில் கட்டுமான பணிகள் முடிந்து தற்போது வெப்ப சோதனை ஓட்டம் நடந்து வருவதாக தெரிவித்த பாலாஜி, இந்தாண்டு இறுதியில் முதல் உலையில் மின் உற்பத்தி துவங்கும் என்றும், அடுத்த 3 மாதத்தில் உற்பத்தி முழு திறனை எட்டும் என்றும், அதிலிருந்து7 முதல் 8 மாதத்தில் 2வது உலை செயல்படத்துவங்கும் என்றும் தெரிவித்தார். அணுகதிர் வீச்சு ஏற்பட்டால் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இம்மாத இறுதியில் உணுஉலை ஊழியர்களுக்கு பயிற்சி நடக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை