| ADDED : ஆக 28, 2011 09:15 PM
மதுரை:ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு ஆதரவாக, சிறை கைதிகள் போராட திட்டமிட்டுள்ளார்களா என கண்காணிக்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.சாந்தன் உட்பட 3 பேருக்கு வேலூர் சிறையில் செப்.9ல் தூக்கு நிறைவேற்றப்படவுள்ளது. இதை ரத்து செய்யக்கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடக்கின்றன. முன்னெச்சரிக்கையாக, வேலூர் சிறையில் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தமிழீழ ஆதரவு கைதிகள் திருச்சி, கோவை, புழல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தூக்குத் தண்டனை கைதிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி போன்ற போராட்டங்களில் ஈடுபட வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனால் இவர்களை 24 மணி நேரமும் கண்காணிக்குமாறு சிறை நிர்வாகங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.