உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனைவியை கொலை செய்த கணவர் தப்பியோட்டம்

மனைவியை கொலை செய்த கணவர் தப்பியோட்டம்

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே வேறொருவருடன் குடும்பம் நடத்திய மனைவியை கொலை செய்த கணவரை, போலீசார் தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்த வேடபட்டியைச் சேர்ந்தவர் இளங்கோமணி. இவருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் கிருஷ்ணவேணிக்கும்(38), 12 ஆண்டிற்கு முன் திருமணம் நடந்தது. 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இளங்கோமணி, வெளிநாட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். இதன்பின், அவரது உறவினரான தொழிலாளி சசிக்குமாருக்கும், கிருஷ்ணவேணிக்கும் தொடர்பு ஏற்பட்டது. அவர்கள் ஏழு மாதத்திற்கு முன், தங்கம்மாள்புரத்தில் குடியேறினர். ஊருக்கு திரும்பிய இளங்கோமணிக்கு இது எரிச்சலை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம் இளங்கோமணி, தங்கம்மாள்புரம் சென்று கிருஷ்ணவேணி வீட்டில் தங்கியுள்ளார். நேற்று காலை சசிக்குமார் வேலைக்குச் சென்றதும், இளங்கோமணி, இப்பிரச்னை தொடர்பாக கிருஷ்ணவேணியுடன் வாக்குவாதம் செய்து, அவரது கழுத்தை மின்வயரால் நெரித்தார். இதில், கிருஷ்ணவேணி இறந்தார். தப்பியோடிய இளங்கோமணியை, சூரன்குடி போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ