உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராஜபாளையம் அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி

ராஜபாளையம் அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று காலை 7. 20 மணியளவில் சென்று கொண்டிருந்தது. ராஜபாளையத்தில் இருந்து 13 கி.மீட்டர் தொலைவில் சோலைச்சேரி கிராமம் அருகே தண்டவாளத்தில் சிலிப்பர் கட்டைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனை பார்க்காத டிரைவர் ரயிலை இயக்கி சென்றார். ஆனால் வழக்கத்திற்கு மாறான சப்தம் வந்ததை அடுத்து ரயிலை மெதுவாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்தில் இருந்து ரயில் தப்பியது. இந்த சம்பவத்தினால் ரயில் 10 நிமிடம் தாமதமானது. கரிவலம் வந்த நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சங்கரன்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்த அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி