உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மின்வேலியில் சிக்கி இரண்டு பேர் பலி

மின்வேலியில் சிக்கி இரண்டு பேர் பலி

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே, நிலத்தில் அமைத்த மின்வேலியில் சிக்கி, இருவர் இறந்தனர்.விழுப்புரம் மாவட்டம், வரஞ்சரம் அடுத்த உடையநாச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரய்யன், 44. இவர், அதே ஊரைச் சேர்ந்த சுப்ரமணியன் நிலத்தில், குத்தகைக்கு கரும்பு பயிரிட்டிருந்தார். காட்டு பன்றிகள், இரவு நேரங்களில் கரும்பு பயிர்களை நாசமாக்கியதால், நிலத்தை சுற்றி மின் வேலி அமைத்தார். இந்நிலையில், அதே பகுதி காலனியைச் சேர்ந்த ரவி, 37 என்பவரது ஆடு நேற்று முன்தினம் காணாமல் போனது. இதனால், நேற்று இரவு 8.30 மணியளவில், வீரய்யனின் கரும்பு தோட்டத்திற்குள் ஆட்டை தேட நுழைந்தார்.அப்போது, மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடினார். இதைப் பார்த்த வீரய்யன், ரவியை தொட்டுக் காப்பாற்ற முயன்ற போது, அவர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில், மின்சாரம் தாக்கி, இருவரும் சம்பவ இடத்தில் இறந்தனர். வரஞ்சரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை