உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் டாக்டர் மகள்கிணற்றில் தவறி விழுந்து பலி

நெல்லையில் டாக்டர் மகள்கிணற்றில் தவறி விழுந்து பலி

திருநெல்வேலி:நெல்லை அருகே டாக்டரின் மகள் கிணற்றில் தவறி விழுந்து இறந்துபோனார்.திருநெல்வேலி பேட்டை, செக்கடி பகுதியில் வசிப்பவர் ஆறுமுகம் 57. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி விருப்ப ஓய்வில் தற்போது பேட்டையில் தனியாக ஆஸ்பத்திரி நடத்திவருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலையில் அவரது இரண்டாவது மகள் நித்யா 27, வீட்டில் இருந்தபோது, வீட்டுக்குள் ஆடு ஒன்று வந்துள்ளது. அதனை விரட்டுவதற்காக பின்தொடர்ந்து ஓடியவர், வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. பேட்டை போலீசார் தற்செயல் இறப்பு(174) என வழக்குபதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இறந்த நித்யா, பி.இ.,இன்ஜினியரிங் முடித்துள்ளார். அவர் சாவுக்கு வேறு காரணங்கள் இருக்குமா என்பது குறித்தும் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை