உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி இடைத்தேர்தலில் கே.என். நேரு போட்டி

திருச்சி இடைத்தேர்தலில் கே.என். நேரு போட்டி

சென்னை : தி.மு.க., வெளியிட்டுள்ள அறிவிப்பு:திருச்சி மேற்கு தொகுதி சட்டசபை இடைத்தேர்தல், வரும் அக்., 13ம் தேதி நடக்கிறது. இதில், தி.மு.க., வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட செயலருமான கே.என்.நேரு போட்டியிடுவார்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.கடந்த சட்டசபைத் தேர்தலில், இதே தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக நேரு போட்டியிட்டு, மறைந்த மரியம்பிச்சையிடம் தோல்வியடைந்தார். அந்த தேர்தலில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மரியம்பிச்சை, 77 ஆயிரத்த, 492 ஓட்டுகளும், நேரு, 70 ஆயிரத்து, 313 ஓட்டுகளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி