மேலும் செய்திகள்
கோவை, தேனி, தென்காசி, நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை
44 minutes ago
மலை பாதைகளில் மண் சரிவு: மலை ரயில் ரத்து
50 minutes ago
வேலூர்: வேலூர் சிறையில், நளினி, முருகன் சந்திப்பு நடந்தது.இவர்கள் இருவரும், 15 நாட்களுக்கு ஒரு முறை சிறையில் சந்தித்துப் பேச, சிறைத் துறையினர் அளித்த அனுமதியின்படி, போலீஸ் பாதுகாப்புடன் முருகன், பெண்கள் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, சிறை அதிகாரிகள் முன்னிலையில், இவர்கள் சந்திப்பு, நேற்று நடந்தது. ஐகோர்ட், தூக்குத் தண்டனையை ஒத்தி வைத்த எட்டு வார காலம் முடிய, குறைந்த நாட்களே உள்ளதாக, கண்ணீர் வடித்த முருகனை, நளினி சமாதானம் செய்ததாக, சிறைக் காவலர்கள் தெரிவித்தனர்.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், வேலூர் ஆண்கள் சிறையிலும், இதே வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி நளினி, பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
44 minutes ago
50 minutes ago