உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவளவன் மீது நான்கு வழக்குகள் பதிவு

திருமாவளவன் மீது நான்கு வழக்குகள் பதிவு

தூத்துக்குடி:தூத்துக்குடி மாநகராட்சி விடுதலைசிறுத்தைக்கட்சி மேயர் வேட்பாளர் சித்ராவை ஆதரித்து, அக்கட்சி தலைவர் திருமாவளவன் அக்.,9ல் பிரசாரம் செய்தார். திரேஸ்புரத்தில் தேர்தல் விதிமுறைகளை மீறி, 15 வாகனங்களில் அவர்கள் பிரசாரத்திற்கு சென்றதாக, எஸ்.ஐ.,பாலகிருஷ்ணன் வடபாகம் போலீசில் புகார் செய்தார். இதன்படி, திருமாவளவன், மேயர் வேட்பாளர் சித்ரா, கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தென்பாகம் போலீசில் இதுபோல இரு வழக்குகளும், முத்தையாபுரம் போலீசில் ஒரு வழக்கும் என, திருமாவளவன் மீது உள்ளாட்சி தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பாக, மொத்தம் நான்கு வழக்குகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ