உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு சாஸ்தா -18

தினமும் ஒரு சாஸ்தா -18

மனபயமா

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் பாலாறு, நீராறு ஒன்றாக சேர்கிறது. இந்த ஆற்றங்கரையில் பூர்ணா, புஷ்கலாவுடன் அருள்பாலிக்கிறார் நீர் காத்த அய்யனார். பராக்கிரம பாண்டியரின் ஆட்சியில் இந்தக் கோயில் பகுதியை கேரள பந்தள தேச மன்னர் ஆக்கிரமிப்பு செய்தார். இவரை விரட்ட சின்னையா தேவன் என்பவரின் தலைமையில் ஒரு படை கிளம்பியது. அவர்கள் மதுரையிலிருந்து கிளம்பி ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் வழியாக வந்து மன்னரை விரட்டினர். பின் நாடு திரும்ப இந்த அய்யனார் கோயில் அருகே உள்ள ஆற்றின் வழியாக வரும்போது, திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. தங்களை காக்கும்படி அய்யனாரிடம் வேண்டவே, கரையில் இருந்த ஒரு பெரிய மரம் விழுந்து பாலமாக அமைந்தது. வீரர்கள் அதன்மேல் நடந்து உயிர் தப்பினர். இவ்வாறு நீரில் இருந்து படையை காத்ததால் 'நீர் காத்த அய்யனார்' ஆனார். இவரை வழிபட்டால் மனபயம் தீரும். வனலிங்கம், தலைமைசுவாமி, சின்ன ஓட்டக்காரசாமி, பெரிய ஓட்டக்காரசாமி, வனகாளி ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள். ராஜபாளையத்தில் இருந்து 15 கி.மீ., நேரம்: காலை 6:00 - மாலை 5:00 மணிஅருகிலுள்ள தலம்: பெத்தவநல்லுார் மாயூரநாதர் 14 கி.மீ., நேரம்: காலை 6:00 - 11:00 மணிமாலை 4:00 - 9:00 மணிதொடர்புக்கு: 04563 - 222 203


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை