உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீசாருக்கு மதிப்பூதியம் வழங்க தாமதம்

போலீசாருக்கு மதிப்பூதியம் வழங்க தாமதம்

தேனி:சட்டசபை தேர்தலுக்காக பாதுகாப்பு பணிகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். போலீஸ் ஸ்டேஷன் அளவில், ஸ்டேட்டிக் சர்விலன்ஸ் டீம், தொகுதி அளவில் பறக்கும் படை, வீடியோ சர்விலன்ஸ் டீம் ஆகிய குழுக்களில், போலீசார் இடம் பெற்றிருந்தனர். அவர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது.மூன்று மாதங்களுக்கு மேலாகியும் குழுக்களில் பணியாற்றிய போலீசாருக்கு மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில்,'தேர்தல் கமிஷன் சார்பில், இதற்கான தொகை போலீஸ் தலைமையகத்துக்கு வழங்கப்பட்டு விட்டது. அங்கிருந்து மாவட்டங்களுக்கு பிரித்து வழங்குவதில்தான் தாமதம் ஏற்பட்டுள்ளது,'என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்