உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் விருந்து: ஜெ., புறக்கணிப்பு

கவர்னர் விருந்து: ஜெ., புறக்கணிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் முதல்வர், அமைச்சர்கள், வி.ஐ.பி.,க்களுக்கு கவர்னர் மாளிகையில், தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இன்று கவர்னர் பர்னாலா அளித்த இந்த விருந்தில், முதல்வர் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக சபாநாயகர் ஜெயக்குமார் கலந்து கொண்டார். மேலும், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மேற்கு வங்க முன்னாள் கவர்னர் கோபாலகிருஷ்ண காந்தி, ஒடிசா மாநில முன்னாள் கவர்னர் ராஜேந்திரன் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் பலர் கலந்து கொண்டனர்.தி.மு.க., மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள், இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை