உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோர்ட் வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

கோர்ட் வளாகத்திலிருந்து கைதி தப்பியோட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கோர்ட் வளாகத்தில் போலீசாரின் பிடியிலிருந்து கைதி திடீரென தப்பியோடினார்.தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை அடுத்த ராமானுஜம் புதூர் சுடலைக்குமார்(30). இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே கழிவு நீர் சென்ற தகராறில், பட்டாணி மனைவி பலவேசம்(36) உள்ளிட்ட மூவரை தாக்கியுள்ளார். பலவேசம் புகாரில் அவதூறு பேசுதல், கொலைமுயற்சி, கொலைமிரட்டல், பெண்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த செய்துங்கநல்லூர் போலீசார், சுடலைக்குமாரை கைது செய்தனர். சிறப்பு எஸ்.ஐ.,ராஜாங்கம், ஏட்டு செல்வின் ஆகியோர், சுடலைக்குமாரை நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் ஜே.எம்., கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு கோர்ட் கிளார்க்கிடம் ஆவணங்களை பூர்த்தி செய்து தந்து விட்டு, நீதிபதி வீட்டிற்கு சுடலைக்குமாரை அழைத்துச்சென்றுள்ளனர். அப்போது, வழியில் அவர்களின் பிடியிலிருந்து சுடலைக்குமார், திடீரென தப்பிஓடிவிட்டார். அவரை போலீசார் தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை