உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வடமாநில நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

வடமாநில நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

காங்டாங்: வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தை மையமாக கொண்டு நேற்று முன்தினம் மாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் மே.வங்கம், பீகார், உள்ளிட்ட மாநிலங்களிலும், நேபாளம் வரையிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தற்போது பலியானவர்களில் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.நிலைமையை சீர்படுத்த மத்திய மாநில அரசுகளின் உதவிகளை நாடியுள்‌ளோம் என மீட்புப்பணியில் ஈடுபட்டு வரும் ராணுவக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை