உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / லாரி பட்டறையில் பணிபுரிந்த 2 குழந்தை தொழிலாளர் மீட்பு

லாரி பட்டறையில் பணிபுரிந்த 2 குழந்தை தொழிலாளர் மீட்பு

நாமக்கல்: நாமக்கல் பகுதியில் உள்ள லாரி பாடி பில்டிங் பட்டறையில் பணிபுரிந்த, இரு குழந்தை தொழிலாளர்களை, தொழிலாளர் துறையினர் மீட்டனர். தொழிலாளர் துறையினர், கொசவம்பட்டி, பட்டறைமேடு மற்றும் ரெட்டிப்பட்டி ஆகிய பகுதியில் உள்ள லாரி பாடி பில்டிங் பட்டறைகளில், குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, ரெட்டிப்பட்டியில் உள்ள லாரி பாடி பில்டிங் பட்டறையில் பணிபுரிந்த, 14 வயதுக்கு உட்பட்ட இரு குழந்தை தொழிலாளர்களை மீட்டனர். மேலும், இரு குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய பாடிபில்டிங் நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து, மேல்நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை