உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்பார்த்து காத்திருக்கிறோம்: தா.பாண்டியன்

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்: தா.பாண்டியன்

திருநெல்வேலி: ''உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுடன் அ.தி.மு.க., மேற்கொள்ளும் ஒதுக்கீட்டை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்,'' என, இந்திய கம்யூ., மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்தார். நெல்லையில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் ஜி.பழனிச்சாமி தலைமையில் ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. ஜாதி, மத மோதல்கள் வராமல் தடுக்க, அரசு முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும். அரசுக்கு, நிதி நெருக்கடி மிகுந்த சுமையாக இருக்கும். அரசு, தன்னிச்சையாக விழாக்கள் நடத்தி வீண் செலவு செய்வதை தடுக்கும் வகையில், நிதியை கையாள்வது குறித்த நெறிமுறைகளை வகுக்கவேண்டும். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடதுசாரிகள் போராடாமல் இருந்திருக்கலாம். ஆனால் நாங்கள் ஒட்டுமொத்தமாக அணுஉலை திட்டங்களையே எதிர்க்கிறோம். எத்தகைய திட்டங்களாக இருந்தாலும் மக்கள் எதிர்ப்பு ஏற்பட்ட பிறகு அதை செயல்படுத்த தேவையில்லை. இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை