உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அ.தி.மு.க., அலுவலகம் முற்றுகை

அ.தி.மு.க., அலுவலகம் முற்றுகை

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றிய 15வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகரான மணிவண்ணன் என்பவர் தன்னை இந்த வார்டு கவுன்சிலராக, திருச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் அறிவித்துள்ளார் எனக்கூறி தேர்தல் பணிகளில் ஈடுபட்டார். இதனையறிந்த அந்த வார்øடை எதிர்பார்த்து காத்திருந்த கர்ணன் மற்றும் உத்தம்ஸ்ரீபவர் சிங் ஆகியோர் தலைமையில் 150க்கும் மேற்பட்டோர் திருச்சியில் உள்ள அ.தி.மு.க, அலுவலகத்தை இரவில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தகவலறிந்த மாவட்ட செயலாளர் விரைந்து வந்து, உறுப்பினரை கட்சி மேலிடம் தான் அறிவிக்கும். மணிவண்ணனை தேர்தல் பணி மட்டுமே செய்யக்கூறியதாக கூறி சமாதானம் செய்தார். இதனையடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ