உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துமஸ் சிந்தனைகள்

கிறிஸ்துமஸ் சிந்தனைகள்

அன்பானவர்

யூதர்கள் கொண்டாடிய 'பாஸ்கா' விழாவை இயேசுவும், அவரது சீடர்களும் கொண்டாடினர். பின் சாப்பிட்ட பிறகு இயேசு பந்தியில் இருந்து எழுந்தார். துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு, குவளையில் தண்ணீர் எடுத்து தன் சீடர்களின் பாதங்களைக் கழுவினார். பிறகு துண்டால் துடைத்தார். இதைப் பார்த்த சீடர்களுக்கு பேரதிர்ச்சி. 'போதகரான நான், உங்கள் கால்களை கழுவினேன். அதைப் போல் நீங்களும் மற்றவருடைய கால்களை கழுவுங்கள். இதைப்போல நீங்களும் அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள்' என்றார் இயேசு. சரி. அன்பு காட்டுவது என்றால் என்ன? ஒருவரின் மனதை புரிந்து கொள்வதுதான். உதாரணமாக நாம் அன்பு காட்டும் நபர் தன் மனதில் உள்ளதைச் சொல்கிறார் என்றால், அதை காது கொடுத்து கேளுங்கள். இதுவே அவருக்கு பசிக்கிறது என்றால் உணவு கொடுங்கள். இப்படி ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே அன்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ