உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் கட்டளைபடி போதை பொருள் கடத்தினோம்: கூட்டாளிகள் வாக்குமூலம்

ஜாபர் சாதிக் கட்டளைபடி போதை பொருள் கடத்தினோம்: கூட்டாளிகள் வாக்குமூலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது கூட்டாளிகள் முகேஷ், 33, முஜிபுர், 34, அசோக்குமார், 34, மற்றும் சதானந்தம், 45, ஆகியோர் கைது செய்யப்பட்டு, டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் சட்டவிரோத பணி பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐந்து பேரிடமும், சிறைக்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர். விரைவில் ஐந்து பேரையும் கைது செய்யவும் முடிவு செய்துள்ளனர்.அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஜாபர் சாதிக் கூட்டாளிகள் அளித்துள்ள வாக்குமூலம்:போதை பொருள் கடத்தல் தொழிலில், ஜாபர் சாதிக், அவரது சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் ஆகியோர் மிகவும் கெட்டிக்காரர்கள். மூவருக்கும் சதானந்தம் தான் வலது கரம். போலீசாருக்கு சந்தேகம் வரக் கூடாது என்பதற்காக, சென்னை பெருங்குடியில் வாடகைதாரர்கள் வசிக்கும் இடத்தை தேர்வு செய்து, வீடு ஒன்றில் போதை பொருட்களை தயாரித்தோம்.ஜாபர் சாதிக் எங்களிடம் அதிகம் பேச மாட்டார். அவரிடம் இருந்து கட்டளைகள் மட்டுமே வரும். அவரது சகோதரர்கள் தான், வெளிநாடுகளுக்கு போதை பொருள் கடத்துவது பற்றி உத்தரவு பிறப்பிப்பர். அவசர தேவைக்கு, ஆந்திராவில் இருந்தும், 'மெத்தம் பெட்டமைன்' வாங்கிக் கொள்வோம். போதை பொருள் வியாபாரிகள் துணி வாங்குவது போல, பாரிமுனை பஜாருக்கு வருவர். பெரும்பாலும் ரகசிய சந்திப்புகள் அங்கு தான் நடக்கும்.வெளிநாடுகளுக்கு வெற்றிகரமாக போதை பொருள் கடத்தினால், எங்களுக்கு பண்ணை வீடுகளில் ஜாபர் சாதிக் சகல விதமான விருந்தும் தருவார். அவர் இப்படி ஒரு தொழிலில் ஈடுபட்டு வருகிறார் என்பதை, எளிதில் கண்டுபிடிக்க முடியாது. வெளிநாட்டு கரன்சிகளை மாற்றும் பொறுப்பை தம்பி முகமது சலீமிடம் தான் ஒப்படைத்து இருந்தார். எங்கள் வங்கி கணக்கு வாயிலாகவும் பண பரிமாற்றம் நடந்துள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

Subramaniam Mathivanan
மே 11, 2024 19:15

உயர்நீதி மன்றம் தண்டனை கொடுத்தாலும் உச்சநீதி மன்ற நீதிபதிகள் தடை விதித்து ஜாமீன் கொடுத்து ஒன்றுமில்லாமல் செய்து விடுவர்


Lion Drsekar
மே 11, 2024 14:56

எல்லாம் சரி, நடவடிக்கை அற்புதம், முடிவு ??? திருவிளையாடல் தருமி போல் செய்வது அறியாமால் தவிக்கிறோம் , சொல்லவும் முடியவில்லை, எழுதவும் முடியவில்லை காரணம் சட்டம் அப்படி இருக்கிறது அமைதியாகவும் இருக்க முடியவில்லை முடிவு ?? எல்லாமே விழலுக்கு இறைத்த நீர் எல்லா துறைகளும் ஊத்தி மூடிவிட்டு ஜனநாயக நீரோட்டத்தோடு கைகோர்த்து வாழ்வதே நல்லது என்ற நிலை உருவாகிவிட்டதால் நேர்மை, நாணயம், மக்களுக்கும் நாட்டுக்கும் பணியாற்றவேண்டும் என்ற தூய பணியில் ஈடுபடாமல் ஊரோடு ஒத்து வாழ்வதே நல்லது இதுதான் இன்றைய நிலை அணில் ஒன்றுதான் மீதம் இருப்பது மற்ற நிலையில் எல்லாமே சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது வாழ்க இவ்வையகம், வந்தே மாதரம்


MADHAVAN
மே 11, 2024 12:39

எங்கிருந்து போதைப்பொருள் வாங்கினார் னு சொல்லுங்கப்பா, எந்த துறைமுகத்தில் போதைப்பொருள் வந்ததுன்னு சொல்லுங்க,


ஆரூர் ரங்
மே 11, 2024 11:12

ஜாஃபர் கூட மேலிடக் கட்டளைப்படி வணிகம் செய்திருக்கலாம்.


Barakat Ali
மே 11, 2024 11:11

இனி அவன் யார் யாருக்கு சம்பாதித்து கொடுத்தான் என்கிற விசாரணையை உடனே முடியுங்கள் அனைவருக்கும் தண்டனை வழங்குங்கள்


Srinivasan Krishnamoorthi
மே 11, 2024 11:01

ஆளும் கட்சியின் அயலக அணி தலைவரும் வேடிக்கை தான் பார்த்து கொண்டிருந்தாரோ ?


Kasimani Baskaran
மே 11, 2024 10:37

சமூகத்தை நாசம் செய்ய மட்டும் பயன்படுத்தி இருக்கிறார்கள் படமெடுக்க இந்தப்பணம் பயன்படுத்தப்படவில்லை என்று வேறு கூடுதலாக உருட்டுகிறார்கள் இவர்கள் தொடர்புள்ளவர்களின் ஆடிட்டர்களை பிடித்து நொங்கெடுத்தால் அணைத்து விபரங்களும் வெளிவரும்


duruvasar
மே 11, 2024 10:24

இறைவன் மிக பெரியவன் புரிஞ்சுக்க


தமிழ்வேள்
மே 11, 2024 10:21

இங்கு மரணதண்டனை அளிக்க இயலாவிட்டால் , சிங்கபூரிடம் கையளித்துவிடலாம் தூக்கு உறுதி


Apposthalan samlin
மே 11, 2024 10:15

அதானி துறை முகத்தில் பிடித்த போதை பொருள் நான்கு டன் என்ன ஆனது என்று கேட்டால் ஆவி ஆகி உள்ளது என்று சொன்னால் நம்ப முடியுமா? லட்சம் கோடி யார் பாக்கெட் கு போனது ? கட்சி பேத மின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது


M S RAGHUNATHAN
மே 11, 2024 11:53

டன் கணக்கில் சர்க்கரையை கிடங்குகளில் எறும்பு தின்னலாம் காலி சாக்கு கோனிகளை கரையான் சாப்பிடலாம் போதைப் பொருள் ஆவியாக மாறக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா? இதை நம்ப முடியவில்லை என்றால் முன்னர் குறிப்பிட்டதையும் நம்பக் கூடாது திமுகவின் பதில் என்ன?


மேலும் செய்திகள்