உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக் வங்கி ஆவணம் போலியா என ஈ.டி., விசாரணை

ஜாபர் சாதிக் வங்கி ஆவணம் போலியா என ஈ.டி., விசாரணை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ஜாபர் சாதிக், வங்கி பண பரிவர்த்தனை ஆவணத்தின் பதிவுகளில் முரண்பாடுகள் இருப்பதால், போலியாக தயாரிக்கப்பட்டவையா என்ற கோணத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.போதை பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு மற்றும் சகோதரர் முகமது சலீம் மீது, அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்த வழக்கில் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்துள்ள ஜாபர் சாதிக்கை, ஏழு நாள் காவலில் எடுத்தும் விசாரித்துள்ளனர். அவரின் மனைவி அமீனா பானுவிடமும் விசாரிக்கப்பட்டு உள்ளது. ஜாபர் சாதிக் வங்கி கணக்கில் இருந்து, சினிமா பட இயக்குனர் அமீருக்கு, 3.93 கோடி ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. ஜாபர் சாதிக், அமீனா பானு, முகமது சலீம் ஆகியோர் வங்கி கணக்கு வாயிலாக செய்த பண பரிவர்த்தனைகள் குறித்த ஆவணங்களை, அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டி உள்ளனர். சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடவில்லை என, ஜாபர் சாதிக் தரப்பிலும், வங்கி ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதற்கும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திரட்டியுள்ள ஆவணங்களிலும், வங்கி பண பரிவர்த்தனை பதிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அமலாக்கத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'நாங்கள் திரட்டி உள்ள, ஜாபர் சாதிக் வங்கி கணக்கில் இருந்து சில முக்கிய புள்ளிகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. 'ஆனால், ஜாபர் சாதிக் தரப்பில் தாக்கல் செய்து உள்ள ஆவணத்தில், அது தொடர்பான பதிவுகள் இல்லை. போலி ஆவணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Sridhar
ஜூலை 27, 2024 13:26

இப்படி விசாரிச்சிட்டே இருங்க, சரியான துப்புக்கெட்ட நிறுவனம் இந்த ED . ஹை கோர்ட்டு மணல்கொள்ளை விவகாரத்தில் இவிங்களுக்கு அதிகாரம் இல்லனு தீர்ப்பு கொடுத்திடுச்சி. உடனே அதை எதிர்த்து உச்ச கோர்ட்டுல அப்பீல் கூட போடல. அவ்வளவு பெரிய கொள்ளை நடந்திருக்கு. அந்த கட்சிக்காரனே 60000 கோடி ஒரு மந்திரியே அடிச்சிருக்கான்னு ஓப்பனா சொல்றான். அவ்வளவு சீரியசான மேட்டருல ரொம்பவே கேசுவலா நடந்துக்கறத பாத்தா எதோ உள்ளடிவேலை நடந்துடுச்சிபோல தெரியுதே?


ஆரூர் ரங்
ஜூலை 27, 2024 15:04

ஹைக்கோர்ட்டே தேவலாம். அனுபவம் அப்படி.


Anand
ஜூலை 27, 2024 12:34

திருட்டு தீயசக்தி கூட்டத்தின் ஆளு, அணைத்து விதத்திலேயும் தில்லாலங்கடி வேலை செய்ய சொல்லி பாடம் எடுப்பார்கள்


நிக்கோல்தாம்சன்
ஜூலை 27, 2024 09:14

தரவுகளை அழிப்பதில் அந்த முன்னாள் கட்சி சார்ந்த அனைவரையும் பார்த்துக்கொண்டுள்ளோம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 27, 2024 08:38

இப்பல்லாம் பல வழக்குகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுகின்றன ..... அதே கதிதான் இந்த வழக்குக்கும் ....... கைதானவர்கள் பெரிய இடம் என்று புரிகிறது ...... புலிகேசி மன்னர் குடும்பத்தை டச் பண்ண வாய்ப்பே இல்லை .....


Kasimani Baskaran
ஜூலை 27, 2024 07:01

முக்கியமானவர்கள் ஆவணங்களை போலியாக தயாரிப்பதில் நிபுணர்கள். முக்கியமானவர் என்றால் உடனே டெல்லிக்கு அழைத்துப்போய் உள்ளே தூக்கி வைக்க வேண்டும். ஓரிரு வருடம் வெளியே வரக்கூடாது - நேர்மையான நீதிபதிகளை வைத்து விசாரிக்கும் அளவில் வழக்குக்களை பட்டியலிடவேண்டும்.


Radhakrishnan Venkatraman
ஜூலை 27, 2024 15:08

We appeal to Union government to expedite all the criminal cases which are pending in courts and secure punishment. These criminals enjoy with illegal money all the time when their cases are pending in courts .Quick action is required


Duruvesan
ஜூலை 27, 2024 05:23

அமீர் சார் நல்லவர்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ