உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டாஸ்மாக் ஊழலை சொன்னேன் சோதனைக்கு பின் உறுதியாகியுள்ளது

டாஸ்மாக் ஊழலை சொன்னேன் சோதனைக்கு பின் உறுதியாகியுள்ளது

வேலுார்:''மும்மொழி கொள்கை விஷயத்தில் தி.மு.க., தன்னுடைய முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்,'' என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.வேலுாரில் நேற்று முன்தினம் இரவு, புதிய தமிழகம் கட்சி சார்பில் நடந்த, இட ஒதுக்கீடு மீட்பு கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கிருஷ்ணசாமி, அளித்த பேட்டி: இந்திய அரசியல் சாசன அடிப்படையில், சமூக கல்வி ரீதியாக, பின் தங்கிய மக்களை பட்டியலிட்டு, தமிழகத்தில், 26 ஜாதிகளுக்கு, 18 சதவீத இட ஒதுக்கீட்டை அறிவித்தனர். ஆனால், தமிழகத்தில், 18 சதவீத இடஒதுக்கீட்டை முறையாக கொடுக்கவில்லை. கடந்த, 2023ம் ஆண்டு, 19 மது ஆலைகள் மற்றும் டாஸ்மாக், பார்களில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக கூறினேன். தற்போது, அமலாக்க சோதனை நடந்து, அது உறுதியாகி உள்ளது. இது குறித்து அமலாக்கத் துறை விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும். மும்மொழி கொள்கையை விஷயத்தில், தி.மு.க., தங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மும்மொழி எதிர்ப்பு என சொல்லி தமிழக மக்களை வஞ்சிக்கக் கூடாது. பாலியல் சீண்டல் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து, கல்வி சான்றுகளை ரத்து செய்வது வரவேற்கதக்கது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

S.V.Srinivasan
மார் 14, 2025 11:04

டாக்டர் சார் . திராவிட மாடல் அறிவாளிகளுக்கு சொன்னாலும் புரியாது, சுயமாவும் தெரியாது. அவங்க பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதாடும் வர்கத்தை சேர்ந்தவர்கள். திருத்த முடியாத ஜென்மங்கள். இவர்களின் பாழாப்போன மொழி கொள்கையால் பாதிக்க பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். 60 வருஷமா இதை வைத்தே அரசியல் செய்து அரசையும் நடத்துகிறார்கள். உங்களை போல் படித்தவர்கள் தேச பக்தி உள்ளவர்கள் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்பது என்னை போன்ற சாதாரண குடிமக்களின் விருப்பம். 2026 வரை பொறுத்திருந்து பார்ப்போம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை