உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவேகானந்தர் மண்டபத்தில் தியானம்: மோடிக்கு தமிழக காங்., எதிர்ப்பு

விவேகானந்தர் மண்டபத்தில் தியானம்: மோடிக்கு தமிழக காங்., எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: குமரியில் விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி தியான நிகழ்வுக்கு அனுமதி தரக்கூடாது என தமிழக காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி மே.30ம் தேதி தமிழகம் வருகிறார். கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தில், வரும், 30, 31, ஜூன் 1ல் தியானம் செய்கிறார். இந்நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கூறியுள்ளதாவது. தேர்தல் வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக மறைமுக வாக்கு சேகரிக்கும் விதமாக பிரதமர் மோடி குமரி வந்து தியானம் செய்வது தேர்தல் விதி மீறல். தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி இது போன்று நிகழ்வுகளுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி தரக்கூடாது.அப்படியென்றால் நாங்களும் தியானம் செய்வோம். அதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க வேண்டும். இது தொடர்பாக ஆணையத்திற்கு கடிதம் அளிக்க உள்ளோம் தேவை பட்டால் நீதிமன்றத்தை அணுகுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 61 )

M Ramachandran
மே 30, 2024 19:57

இவனெல்லாம் காங்கரஸ் காரன் கான்க்ரீசைய்ய இவ்வளவு படு பாதாளத்தில் தள்ளியது இந்திரா பிறகு வேறு யாருமல்ல மேலும் கீழ் நிலைக்கிக்கு தள்ளியது இத்தாலிய குடும்பம் தான் மற்றும் அதன் ஜாலராக்கள்


jayvee
மே 30, 2024 17:59

காமராஜரை மதிக்கவில்லை ..ஓமந்தூராரை மதிக்கவில்லை. ராஜாஜியை மதிக்கவில்லை.. கருணாநிதி சமாதியில் தயிர் வடை வைக்க இவ்வளவு நாடகம் .. என்ன செய்வது.. இப்போது உள்ள கட்சி பதவியே திமுக வாங்கிக்கொடுத்ததுதானே


Subramanian N
மே 30, 2024 12:38

கருணாநிதி நினைவிடத்திற்கு நீங்களும் உங்கள் சகாக்களும் 300 நாள் தியானம் இருங்கள்


MADHAVAN
மே 30, 2024 11:26

கலைஞர் கட்டிய மண்டபத்தில் அமர்ந்து தமிழக மக்களிடம் மன்னிப்புகேட்பாரு, மறப்போம் மன்னிப்போம்,


duruvasar
மே 30, 2024 09:52

உங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் நினைவிடத்தலிருந்து 3 நாட்கள் என 300 நாட்கள் தியானம் செய்யுங்கள். தினமும் தயிர் வடை கிடைக்கும். வேலு அடிகளாரின் பஜனை நிகழ்ச்சியும் நடத்தலாம்.


Narayanan
மே 29, 2024 23:49

தமிழகத்தில் தேர்தல் முடிந்து விட்டது . மேலும் அனைத்து பிரச்சாரங்களும் முடிவுக்கு வந்து விட்டது . தமிழ்நாட்டில் தியானம் செய்ய அனுமதிக்க கூடாது என்று ஏன் சொல்ல வேண்டும் .? செல்வப்பெருத்தகை அவர்களும் தியானம் செய்யலாம் . தேர்தல் கமிஷன் உங்களை அனுமதிக்காமல் இருந்தால் குற்றம் சொல்லலாம் .


மாயவரத்தான்
மே 29, 2024 23:00

பாஜக தலைவர் அண்ணாமலை இடம் மாட்டுக்கறி விருந்து வைக்க சொன்னார் உங்கள் தலைவர்களில் ஒருவரான இ வி கே எஸ் இளங்கோவன். உங்களுக்கும் இந்து மதத்திற்கும் என்ன சம்பந்தம் ?


Ramesh Sargam
மே 29, 2024 22:36

உங்களுக்கும் தியானம் செய்ய தெரிந்தால் நீங்களும் செய்யலாம், அவர் சென்றபிறகு. அதைவிட்டுவிட்டு இப்படி அடாவடித்தனம் செய்யாதீர்கள். மோடிஜி தியானம் செய்வதை அரசியல் செய்யாதீர்கள்.


cbonf
மே 29, 2024 21:44

நானூறு தொகுதிகளில் வெற்றி பெற்று மோதி அவர்கள் மீண்டும் பிரதமர் ஆகப்போவது உறுதி. இந்த முறை மோதி அவர்கள் நமது கல்வி துறையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவருவதும் உறுதி. யோகா, பிராணாயாமம், தியானம் போன்ற நம் தமிழ் பண்பாட்டு பயிற்சிகளை மோதி கல்வி துறையில் சேர்த்து நம் மாணவர்கள் குடி, போதை, புகையிலை போன்ற தீய பழக்கங்களில் இருந்து தப்ப வழி செய்வார்


Ramesh Sargam
மே 29, 2024 20:29

இதுபோன்ற நல்லசெயல்கள் திமுக, காங்கிரஸ் போன்றவர்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது. ஆகையால் மோடிஜியின் தியானத்தை தடை செய்ய முயற்சிசெய்கிறார்கள். அந்த பயம் வேண்டும்.


Venugopal Gopalsamy
மே 31, 2024 08:38

அய்யோ


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை