உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-10

ரம்ஜான் சிந்தனைகள்-10

மது அருந்தாதீர்

இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. இது நல்லதல்ல என்கிறார் நபிகள் நாயகம். ஒருமுறை அவரிடம் தோழர் ஒருவர், ''நாங்கள் குளிர்பிரதேசத்தில் வாழ்கிறோம். குளிரை தாங்க முடியவில்லை. இதைப்போக்க மது அருந்துகிறோம்'' என்றார். ''அந்த மதுவில் போதை இருக்கிறதா'' ''ஆம்'' என தோழர் சொன்னதும், ''அப்படியானால் அதைக் குடிக்காதீர்கள்'' என்றார். ''சரி. நான் குடிக்க மாட்டேன். ஆனால் மக்கள் கேட்க மாட்டார்களே'' ''அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்'' என்றார் நாயகம்.குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்த வேண்டும் என்பது அவரது கொள்கை. ஏன்? இதை இவ்வளவு எதிர்க்கிறார் தெரியுமா... * மது அருந்துதல் பாவங்கள் அனைத்திற்கும் தாய். * மது அருந்துபவன் தொழுகையை விட்டு விடுவான்.* மது அருந்துவோருக்கு மறுவுலகிலும் கடும்தண்டனை கிடைக்கும். அதாவது அவர்கள் நரகவாசியின் சீழ், வியர்வை அருந்த வேண்டி வரும். யோசியுங்கள். தேவைதானா. எனவே நோன்பு காலத்தில் இருந்தாவது மதுவை தொட மாட்டேன் என சபதம் செய்யுங்கள். இன்று நோன்பு துறக்கும் நேரம்: மாலை 6:35 மணிநாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:55 மணி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை