உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரம்ஜான் சிந்தனைகள்-30

ரம்ஜான் சிந்தனைகள்-30

வளமான வாழ்க்கை

ரம்ஜான் அன்று கிழிந்த ஆடையுடனும் கண்ணீருமாக நின்றிருந்தான் ஒரு சிறுவன். இவனது கண்களில் தெரிந்த ஏக்கத்தை அருகில் இருந்த நபிகள் நாயகம் பார்த்தார். அவனிடம், ''ஏன் அழுகிறாய். சாப்பிடவில்லையா'' எனக்கேட்டார். அதற்கு அவன், ''நான் அநாதை'' என அழுதான். உடனே அவர், ''அழாதே. என் மனைவி ஆயிஷா உனக்கு தாய். எனது மகள் பாத்திமா உன் சகோதரி'' என சொல்லி அவனை வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு பலகாரங்களை சிறுவனுக்கு கொடுத்தார் ஆயிஷா. பின் புது ஆடையை அணிந்து கொண்டு நாயகத்துடன் தொழுகைக்கு சென்றான். ஈத்துவக்கும் பெருநாளான ரம்ஜான், நாளை கொண்டாடப்படுகிறது. நோன்பு இருந்து இறைவனின் கருணையைப் பரிசாகப் பெற்றவர்கள், சுவனத்தின் பாதையை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த மகிழ்ச்சியான தருணத்தில் இறையருளைப் பெற்று வளமான வாழ்க்கையை பெறுவோம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை