உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியாளர்கள் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை: பிரேமலதா

ஆட்சியாளர்கள் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்பனை: பிரேமலதா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''டாஸ்மாக் கடைகளில் என்ன நடக்கிறது என்பது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்,'' என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா கூறினார்.சென்னை, கிண்டி ராஜ்பவனில், கவர்னர் ரவியை நேற்று பிரேமலதா சந்தித்து பேசினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=t6x3fx5l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பின், அவர் அளித்த பேட்டி:கள்ளக்குறிச்சியில் இத்தனை உயிர்கள் போன பின், இன்றைக்கு இந்த அரசு ஆயிரக்கணக்கான லிட்டர் சாராயத்தை அழித்து விட்டதாக கூறுகிறது. இந்த நடவடிக்கைகளை ஏன் முன்கூட்டியே எடுக்கவில்லை? கடந்த ஆண்டு கள்ளச்சாராய சாவுகள் நடந்த போதே, சரியான நடவடிக்கை எடுத்து தடுத்திருந்தால், இத்தனை உயிர்களை இழக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.கள்ளச்சாராயம் வரக் கூடாது என்பதற்காகத்தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.அப்படி இருக்கும்போது, கள்ளச்சாராயம் மீண்டும் ஏன் வருகிறது? இதற்கு யார் துணை போகின்றனர்? ஆட்சியாளர்கள், அதிகாரிகள், காவல் துறை துணையில்லாமல் நிச்சயமாக கள்ளச்சாராயம் காய்ச்ச முடியாது.ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உதவியோடு தான் கள்ளச் சாராயம் காய்ச்சப்படுகிறது; விற்கப்படுகிறது. டாஸ்மாக் கடைகளில் என்ன நடக்கிறது என்பதை, வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

MADHAVAN
ஜூன் 29, 2024 13:29

பேராசைக்காரி என்று படித்திருக்கிறேன், இப்போதான் இவர் ரூபத்தில் பார்க்கிறேன்


Sampath Kumar
ஜூன் 29, 2024 12:06

ஊத்தி கொடுப்பது போல போட்டோ எல்லாம் வந்து பரபரப்பை உண்டாக்கிச்சு... அதுனால உங்களுக்கு நல்ல தெய்ரயும்.... யாரு காசுரங்க என்று இல்லையா அதுதான் அடித்து விடுங்க


ஆரூர் ரங்
ஜூன் 29, 2024 10:35

திமுக அணியில் சேர முயற்சித்தும் முடியாததால் இப்போ அதிமுக கிட்ட ஸ்வீட்பாக்ஸ் வாங்கி முழங்குறார்.


MADHAVAN
ஜூன் 29, 2024 10:33

2018 மற்றும் 2019 ல அதிமுக ஆட்சில கள்ளச்சாராயம் குடிச்சு 43 பேரு செத்தாங்க, நீ எதுக்கு அவனுங்ககூட கூட்டணி வச்சு தேர்தலை சந்திச்சீங்க


Pandianpillai Pandi
ஜூன் 29, 2024 09:34

குடிக்கு அடிமையாகாமல் குடும்பத்தார் கவனித்துக்கொள்ளவேண்டும். சில மனைவிமார்கள் தங்கள் கணவர்களை குடியிலிருந்து வெற்றிகரமாக மீட்டுவிடுகிறார்கள். சிலர் தோல்வியடைந்துவிடுகிறார்கள். அதிக தரம் வாய்ந்த மதுவாக இருந்தாலும் உடலுக்கு கேடு என்பதை விஜயகாந்த் போன்ற தலைவர்களை பார்த்து மக்கள் திருந்த வேண்டும். கிராமபுறங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். யார் கள்ளசாரயம் காய்ச்சுகிறார்கள் என்று மக்களுக்கு நன்றாக தெரியும் . அதை அரசின் கவனத்திற்கு எடுத்துசெல்லவேண்டிய கடமை மக்களுக்கு இருக்கிறது. கிராமபுறங்களில் கண்கானிக்க காவல்துறையில் இருந்து தனிகுழுவை ஏற்படுத்தலாம்.


Sureshkumar
ஜூன் 29, 2024 09:25

வேண்டுமானால் ஒத்துழைப்பு என எடுத்துக்கொள்ளலாம். எப்பொழுது தமிழ்நாட்டிற்கு நல்ல தலைமை கிடைக்குமோ அப்பொழுதுதான் நல்ல அரசாங்கம் கிடைக்கும்.


sridhar
ஜூன் 29, 2024 08:25

ஆதரவுடன் என்ற சொல் தேவை இல்லாதது


Kasimani Baskaran
ஜூன் 29, 2024 07:51

தமிழினம் ஜாதி வேற்றுமைகளை, வெறுப்புக்களை மடத்தினரிடமிருந்து உள்வாங்கி சுயநலத்துடன் ஒரு சில பட்டியலினத்தவர்களை அடக்கியே வைத்து இருந்தது. பலருக்கு அடிப்படை கல்வியே கூட கிடையாது. தொழிற்பயிற்சி போன்றவற்றில் எல்லாம் எந்த வித முன்னுரிமை கிடையாது. பலருக்கு வசதி வாய்ப்புக்கள் கூட கிடையாது. அவர்கள் வேறு என்ன செய்வார்கள் - சட்ட விரோதமான காரியங்கள்தான் செய்வார்கள்.


tmranganathan
ஜூன் 29, 2024 07:14

பணப்பெய்தான் எல்லலெவெல்களிலும் தலை விரித்தாடுகிறது. முதலவர் ஊழலின் ஊற்றுக்கணகா இருக்கும் நிலையில் இதே இழவு இந்த இழவு ஆட்சியில் நடந்தேறும். திராவிடம் ஒழிக்கப்படவேண்டும். அண்ணாமலை முதல்வராக வந்தால் நேரு கிராமத்தில் ஒழிந்துகொள்வார்.


konanki
ஜூன் 29, 2024 04:10

இன்னும் 2/3 நாட்களில் இது பழஞ்செய்தி ஆகி விடும். பழைய படி கள்ள சாராயம் மெதுவாக தலையெடுக்கும். போக போக சீராக பழைய வேகத்தை அடைந்து ஜூலை 2025 ல் இதே போல் 20-40 சாவுகளுடன் மறுபடியும் வெடிக்கும். அப்பவும் இதே மாதிரி ஓரு வாரம் பேசிட்டு எல்லோரும் மறந்துடுவோம்


Kasimani Baskaran
ஜூன் 29, 2024 07:27

என்ன ஒரு வன்மம். அதாவது அடுத்த முறையும் கூட திமுக கூட்டணிக்குத்தான் ஓட்டுப்போடுவேன் என்று சொல்வது அவ்வளவு ரசிக்கவில்லை.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ