உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காற்றாலைகளை புதுப்பிக்க கொள்கை வெளியிட்டது அரசு

காற்றாலைகளை புதுப்பிக்க கொள்கை வெளியிட்டது அரசு

சென்னை:தமிழகத்தில், 20 ஆண்டு முடிவடைந்த காற்றாலை மின் நிலையங்களை புதுப்பிக்க, 'தமிழக காற்றாலை மின் திட்ட மறுசீரமைப்பு மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை - 2024ஐ' பசுமை எரிசக்தி கழகம் வெளியிட்டுள்ளது.தமிழகத்தில், 1986ல் இருந்து காற்றாலை நிறுவப்பட்டு வருகின்றன. அந்த கொள்கையின்படி, 20 ஆண்டுகள் முடிவடைந்த காற்றாலைக்கு மாற்றாக, புதிதாக அமைக்கலாம். ஆயுள் நீட்டிக்க விரும்பும் காற்றாலை, கடந்த மூன்று ஆண்டுகளில், 90 சதவீதம் மின் உற்பத்தி செய்திருக்க வேண்டும். இதற்கு கூடுதலாக, 5 ஆண்டு ஆயுள் நீட்டிப்பு வழங்கப்படும். காற்றாலை மின்சாரத்தை உற்பத்தியாளர் பயன்படுத்தியது போக, உபரியை மின் வாரியத்திடம் வழங்கி, தேவைப்படும்போது வாங்கி கொள்ளலாம். உற்பத்தியாகும் மின்சாரத்தில், 50 சதவீத மின்சாரமே, மின் வாரியம் கொள்முதல் செய்யும். காற்றாலையை புதுப்பிக்க வளர்ச்சி கட்டணமாக, 1 மெகா வாட்டிற்கு, 30 லட்சம் ரூபாயை பசுமை எரிசக்தி கழகத்திற்கு செலுத்த வேண்டும். இந்த கொள்கை, 2030 மார்ச், 31 வரை அமலில் இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !