உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துாத்துக்குடியில் ஹைட்ரஜன் ஆலைக்கு முதலீடு ரூ. 36,000 கோடி: 21ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் --

துாத்துக்குடியில் ஹைட்ரஜன் ஆலைக்கு முதலீடு ரூ. 36,000 கோடி: 21ல் அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் ஸ்டாலின் --

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:துாத்துக்குடியில், 'செம்ப்கார்ப்' நிறுவனம், 36,000 கோடி ரூபாய் முதலீட்டில், பசுமை மின்சாரத்தை பயன்படுத்தி ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை அமைக்க உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 'டிட்டாகர் ரயில்' நிறுவனம், 1,850 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க உள்ளது. இவற்றின் கட்டுமான பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின், வரும் 21ல் அடிக்கல் நாட்டுகிறார். இதன் வாயிலாக, 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.தமிழக அரசு, உள்நாடு மற்றும் வெளிநாட்டு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, இந்தாண்டு ஜனவரியில், சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரு நாட்கள் நடந்த மாநாட்டில், பல்வேறு நிறுவனங்களின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அவற்றில், பெரிய அளவில் முதலீடு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை 632.முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள் தொழில் துவங்குவதை கண்காணிக்க, தொழில் துறை அமைச்சர் ராஜா தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.தலைமைச் செயலர், முக்கிய துறைகளின் செயலர்கள் அடங்கிய சிறப்புக் குழுவின் முதல் கூட்டம், ஜூலை 10ல் நடந்தது. அதில், நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்கான அனுமதியை விரைந்து வழங்குமாறு, அரசு துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, சிங்கப்பூரைச் சேர்ந்த, 'செம்ப்கார்ப்' நிறுவனம், துாத்துக்குடி மாவட்டத்தில், சூரியசக்தி, காற்றாலை மின்சாரத்தை பயன்படுத்தி, 36,238 கோடி ரூபாய் முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைக்க உள்ளது.இதன் கட்டுமான பணிக்கு, முதல்வர் ஸ்டாலின் வரும் 21ல் அடிக்கல் நாட்டுகிறார்; இதன் வாயிலாக, 1,500 பேருக்கு வேலை கிடைக்கும்.

ரயில் சக்கரம்

ரயில் வேகன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள, 'டிட்டாகர் ரயில் சிஸ்டம்ஸ்' நிறுவனம், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 1,850 கோடி ரூபாய் முதலீட்டில் ரயில் சக்கரம் தயாரிக்கும் ஆலை அமைக்க உள்ளது.இதன் கட்டுமான பணிக்கும் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்; இந்த ஆலையால், 1,400 பேருக்கு வேலை கிடைக்கும்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், எல் அண்டு டி நிறுவனம் அதிநவீன, 'டேட்டா சென்டர்' அமைத்துள்ளது. இதை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், தமிழக அரசின் உயரதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Venkatesh
ஆக 05, 2024 13:07

அடுத்து ஆட்சி மாற்றம் வந்ததும் இதே ஆலையை மூட்டும்ன்னு போராடுவாரே.....


Kumar Kumzi
ஆக 04, 2024 15:43

அடிக்கல் தானே நாட்டுறார் சின்னவர் புடுங்கி கொண்டு வருவார் ஹீஹீஹீ


சந்திரன்
ஆக 04, 2024 13:36

இரண்டு ஆண்டுகளுக்கு பின் இதை மூட சொல்லி போராடுவோம் பல போராளிகள் தங்கள் மறைவிடத்தில் இருந்து வெளியே வருவாங்க


R RAMAKRISHNAN
ஆக 04, 2024 11:20

Green Energy க்கு எங்கும் எதிர்ப்பு வந்ததாக படிக்கவில்லை விவரம் இருந்தால் இங்கேயே பகிரவும் இது இயற்கை வளத்தை நாசமாக்கி உற்பத்தி செய்யும் ஹைட்ரஜன் இல்லை. மாறாக பசுமை மின்சாரத்தை பயன்படுத்தி செய்யப்படுவது.


jss
ஆக 04, 2024 10:33

start the drums soon. people will die of cancer, TB and diseases not found so far. Expect good amount from NGOs and start the closure. if you close it before it is opened it will fetch you rich dividend.


spr
ஆக 04, 2024 10:25

இப்படி அவரவர் ஆட்சிக்காலத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி அதில் காசு பார்த்த பின் வருமானம் தடைப்பட்டால் அல்லது குறைந்தால் அதனை ஏதாவதொரு வழியில் மூடுவது திமுகவின் வழக்கம் இந்த ஆலையாவது அரசின் கட்டுப்பாடுகளின் படி இயங்க அந்தந்த துறை அதிகாரிகள் பொறுப்புடன் அவ்வப்பொழுது கண்காணித்து நிர்வகிக்க வேண்டும்


Shekar
ஆக 04, 2024 10:06

பூவுலக நண்பர்களே, சமூக போராளிகளே காற்று மாசுபடபோகிறது, உடனே ஆலையை மூட போராடுங்கள்


Rpalnivelu
ஆக 05, 2024 09:53

இதெல்லாம் இவங்க பினாமி ஆலைகள். ஒரே வருடத்தில் சுருட்டிய 30000 கோடிகளை எப்படி வெள்ளையாக்குவது என்பது ஊழல் விஞ்ஞானி குடும்பத்துக்கு தண்ணீர் பட்ட பாடு. மொஸாட் வந்தாலும் கண்டுபிடிக்க இயலாது. பலே விஞ்ஞானிகள்


ஆரூர் ரங்
ஆக 04, 2024 09:45

வெளிக் காற்றிலிருந்து ஹைடிரஜன் பிரிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதி காற்றில் கார்பன் டை ஆக்சைடு அதிகமாகி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட வாய்ப்பு அதிகமாகி கேன்சர் கூட வரலாம். இதை அமெரிக்க ஆப்பிரிக்க அண்டார்டிகா பசிபிக் வாதிகன், அறிவியலாளர்கள் ஆராய்ச்சியில் வெளிவந்துள்ளது


RAMAKRISHNAN NATESAN
ஆக 04, 2024 11:07

ஹைட்ரஜன் உற்பத்திக்காக பல தொழில்நுட்பங்கள் உள்ளன ..... அனைத்திலும் சாதக, பாதகங்கள் உண்டு ...... தவிர சுற்றுச்சூழல் துறை மத்திய அரசு வசம் உள்ளது ..... அதன் அனுமதி பெற்றுத்தான் மீத்தேன் திட்டமும் துவக்கப்பட்டது அப்போது அத்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் பதவி வகித்தார் .....


Mr Krish Tamilnadu
ஆக 04, 2024 09:34

கழிவுகள் பாதிப்பு இல்லாமல் அகற்றப்படட்டும். வேலை வாய்ப்பை விட, அந்த தொழிலாளர்களுக்கு மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, தேவையான செப்ட்டி உபகாரணங்கள் வழக்கப்பட்டும். தேவையான முன்னெச்சரிக்கை, ஆலோசனைகள் நடவடிக்கைகள் எடுக்க படட்டும். மனித வளம் பயன்படட்டும், மனித உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல். பஞ்ச பூதங்களும் பாதுகாப்பா இருக்கட்டும்.


B Sivanesan
ஆக 04, 2024 09:11

முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்ட ஃபர்னீச்சர் பூங்கா சிறப்பாக செயல்படுவதுபோல இதுவும் செயல் படும் என்று நம்புகிறோம்.


மேலும் செய்திகள்





புதிய வீடியோ