உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்ச் விழாவில் நலம் விசாரித்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள்

சர்ச் விழாவில் நலம் விசாரித்த இன்னாள், முன்னாள் அமைச்சர்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி புனித வியாகுல அன்னை சர்ச்சில் நடந்த சப்பர பவனியில், தி.மு.க., அமைச்சர் பெரியசாமி, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் என இருதரப்பினரும் சந்தித்து, பரஸ்பரம் நலம் விசாரித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.இந்த சர்ச்சில் பாஸ்கு திருவிழா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனியில் பங்கேற்க, தி.மு.க., அமைச்சரான பெரியசாமி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., - மா.கம்யூ., வேட்பாளரான சச்சிதானந்தம் ஆகியோருடன் வந்திருந்தார். சிறிது நேரத்தில் அங்கு அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களான திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் தங்கள் கூட்டணி கட்சியின் எஸ்.டி.பி.ஐ., வேட்பாளரான முகமது முபாரக்குடன் வந்தனர். முன்னாள் அமைச்சர் சீனிவாசன், தி.மு.க., அமைச்சர் பெரியசாமி, வேட்பாளர் சச்சிதானந்தத்திற்கு கைகொடுத்து பரஸ்பரம் நலம் விசாரித்தனர். சீனிவாசன், தன் இளைய மகன் சதீஷை, அமைச்சர் பெரியசாமிக்கு அறிமுகம் செய்தார். சதீஷ் அமைச்சரின் காலை தொட்டு ஆசிர்வாதம் வாங்கினார். இதை தொடர்ந்து இரு தரப்பினரும் சப்பர பவனி நிகழ்ச்சியை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ