உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊராட்சிகளில் நிதிபற்றாக்குறை

ஊராட்சிகளில் நிதிபற்றாக்குறை

திண்டுக்கல்:பதவிக்காலம் முடியும் நிலையில், நான்கு மாதங்களாக மானியம் கிடைக்காமல், பற்றாக்குறையில் சிக்கி ஊராட்சிகள் திணறுகின்றன. ஊராட்சிகளுக்கு மாநில நிதிக்குழு மானியம் மூலம் மாதந்தோறும், 5,000 முதல் 1.5 லட்சம் வரை நிதி வழங்கப் படுகிறது. இதன்மூலம் ஊழியர் சம்பளம், மின் கட்டணம், தெருவிளக்கு பராமரிப்பு, குடிநீர் குழாய் சீரமைப்பு என, செலவுகளை சமாளிக்கின்றன. மாதந்தோறும் கிடைக்க வேண்டிய இந்நிதி, சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு பின், நிறுத்தப்பட்டது. மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மானிய தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் நிதிப்பற்றாக்குறையில் சிக்கி சம்பளம் கூட வழங்க முடியாமல், தலைவர்கள் திணறி வருகின்றனர். பதவிக்காலம் முடியும் நிலையில், தெருவிளக்கு, குடிநீர் குழாய்களை சீரமைக்க முடியாமல் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை