மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
1 hour(s) ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
1 hour(s) ago
திருச்சி:சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.03 கோடி ரூபாய் கடத்தல் தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட, 50 வயது நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், வலி நிவாரண பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவர் மறைத்து எடுத்து வந்த 1.423 கிலோ தங்கத்தை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 hour(s) ago
1 hour(s) ago