மேலும் செய்திகள்
காற்று வேக மாறுபாட்டால் மிதமான மழைக்கு வாய்ப்பு
11-Sep-2024
சென்னை:'தென்மேற்கு பருவக்காற்று திசை மாறியதால், தமிழகத்தில் இயல்பை விட வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மதுரையில் நேற்று, 105 டிகிரி பாரன்ஹீட்டாக வெப்பநிலை பதிவானது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: நாட்டின் பல்வேறு மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொடர்ந்து வறண்ட வானிலையே காணப்படுகிறது. இருப்பினும், வரும் 18 ம் தேதி வரை, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். தென்மேற்கு பருவக் காற்று திசை மாறியதால், பகல் நேர வெப்பநிலை இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும். பகல்நேரங்களில் வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு, வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம். பகல்நேர அதிகபட்ச வெப்பநிலை, 37 டிகிரி செல்ஷியசை ஒட்டியே காணப்படும். மதுரையில் 105!
தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, அதிகபட்சமாக, மதுரை விமான நிலையத்தில், 105 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 40.6 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, துாத்துக்குடியில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியஸ்க்கு அதிகமாக வெப்பம் பதிவானது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
11-Sep-2024