உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் இதுவரை பறக்கும் படை ரூ.109.76 கோடி பறிமுதல்

தமிழகத்தில் இதுவரை பறக்கும் படை ரூ.109.76 கோடி பறிமுதல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் மார்ச் 31 தேதி வரை பறக்கும் படை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது' என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.லோக்சபா தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நாளை (ஏப்ரல் 02) வருமான வரித்துறை, சுங்கத்துறை, ஜிஎஸ்டி, அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதையடுத்து அவர், ஏப்ரல் 4ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இந்நிலையில், சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மார்ச் 31 வரை ரூ.109.76 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. cVIGIL செயலி மூலம் 1,822 புகார்கள் பெறப்பட்டு 1,803 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

சிவா
ஏப் 01, 2024 22:35

இதில் அப்பாவி மக்களிடமிருந்து பிடுங்கியது எவ்வளவு ?


mothibapu
ஏப் 01, 2024 17:39

பறக்கும் படை பிடித்த பணத்தை எவன் கையில் போகிறது இல்லை பிஎம் கேர் கணக்கில் போகுமா?


HoneyBee
ஏப் 01, 2024 17:11

இதில் கார்களில் கொண்டு சென்று பிடிக்காமல் விட்ட பைகளில் உள்ள பணமும் அடங்குமா


vijay s
ஏப் 01, 2024 17:09

கருது தெரிவிக்க முடிய வில்லை


பாரதி
ஏப் 01, 2024 15:40

புகார் கொடுத்தால் இவர்கள் போய் பிடிப்பார்கள்.. பிடித்தவர்களுக்கு சம்பளம்... புகார் கொடுத்தவன் ஏமாளி தான்.... கை வீசிக்கிட்டு வீட்டுக்கு போகலாம்....


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி