உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்

தாயகம் திரும்பிய 19 மீனவர்கள்

சென்னை:இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர், சென்னை திரும்பினர்.ராமநாதபுரம், நாகப்பட்டினம் மாவட்டங்களை சேர்ந்த, 19 மீனவர்கள், ஆகஸ்ட் 24ல் கடலில் மீன் பிடித்த போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். தமிழக முதல்வரின் வலியுறுத்தலை தொடர்ந்து, இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அதிகாரிகளிடம் பேச்சு நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, 19 மீனவர்களையும், இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது. நேற்று முன்தினம் இரவு சென்னை வந்த அவர்களை, சொந்த ஊர்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ