உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2 ஹெலிகாப்டர் லேண்டிங் கால்நடைகள், மக்கள் அதிர்ச்சி

2 ஹெலிகாப்டர் லேண்டிங் கால்நடைகள், மக்கள் அதிர்ச்சி

ஆரணி, மே திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இரும்புலி கொள்ளைமேடு பகுதி மலைக்குன்று மீது நேற்று மாலை, இரண்டு ஹெலிகாப்டர்கள் அரை மணி நேரம் வட்டமடித்தவாறு இருந்தன. இதனால் அப்பகுதியில் கால்நடை மேய்த்து கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.ஹெலிகாப்டர் சத்தத்தால் ஆடு, மாடுகள் மிரண்டு அங்குமிங்கும் ஓடின. இந்நிலையில் இரு ஹெலிகாப்டர்களும் தரையிறங்கின.கண்ணமங்கலம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் அதிகாரிகள் செல்வதற்குள், இரு ஹெலிகாப்டர்களும் சென்று விட்டன. ஹெலிகாப்டர்கள் தரையிறங்கிய சம்பவம் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்