உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொன்முடி மீதான குவாரி வழக்கு இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் சாட்சியம்

பொன்முடி மீதான குவாரி வழக்கு இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் சாட்சியம்

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கில் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேர் நேற்று சாட்சியம் அளித்தனர்.விழுப்புரம் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந்தனர்.விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் நேற்று முன்தினம் வரை 39 பேர் விசாரிக்கப்பட்டனர். நேற்று நடந்த விசாரணையில், தற்போது, சீருடைப்பணியாளர் தேர்வாணைய இன்ஸ்பெக்டர் பழனி, மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் துறை ஏட்டு ஜெயசெல்வி ஆகியோர் ஆஜராகி, வழக்கு தொடர்பாக, ஏற்கனவே நடந்த விசாரணை குறித்து சாட்சியம் அளித்தனர்.அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை