மேலும் செய்திகள்
தேவநாதனின் வங்கி கணக்குகள் முடக்கம்
21-Aug-2024
சென்னை:சென்னை மயிலாப்பூரில், 'தி ஹிந்து பெர்மனன்ட் பண்ட்' என்ற நிதி நிறுவனத்தில், 144 முதலீட்டாளர்களிடம் இருந்து, 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன், பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவரது கூட்டாளிகள் குணசீலன், மகிமைநாதன் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். வழக்கு தொடர்பாக நடந்த சோதனையில், தேவநாதனின் ஐந்து வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.தற்போது நிதி நிறுவனத்துக்கு சொந்தமான, 18 வங்கி கணக்குகள், குணசீலன், மகிமை நாதனின் தலா இரண்டு வங்கி கணக்குகள் என, 22 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 27 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
21-Aug-2024