உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

மனை பத்திரங்கள் பதிவில் விதிமீறல் 40 பேர் சிக்கினர்

சென்னை: அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகள் தொடர்பான பத்திரங்களை பதிவு செய்ய தடை உள்ளது. சில சார் - பதிவாளர்கள், இதுபோன்ற பத்திரங்களை பதிவு செய்வதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனை பதிவு மோசடி குறித்து மண்டல வாரியாக ஆய்வுகள் நடந்து வருகின்றன. இதில், மதுரை மண்டலத்தில் அதிகபட்சமாக, 40 சார் - பதிவாளர்கள் விதிமீறலில் ஈடுபட்டது உறுதியாகி உள்ளது. முதல் கட்டமாக விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை